Advertisment

இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு கைது

nn

இன்ஸ்டாகிராம் பிரபலமான விஷ்ணுவை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழக வெற்றிக கழகம் கட்சிக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் செயல்பட்டு வந்தவர் விஷ்ணு. சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பழகிய ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பெண்ணின் சகோதரர்கள் விஷ்ணுவை கையும் களவுமாக பிடித்து தாக்கியது தொடர்பான வீடியோ காட்சிகள் அண்மையில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இந்த சம்பவத்தின் மூலமாகவும் விஷ்ணு பிரபலமாகிஇருந்தார். ஒப்பனை கலைஞரான விஷ்ணுவின் மனைவி அஸ்மிதா விருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருந்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் விஷ்ணுகுமாருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மனைவியை விஷ்ணு அடித்தது துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனைவி அஸ்மிதா மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் அடிப்படையில் நம்பிக்கை மோசடி; தாக்குதல்; மானபங்கப்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து இன்ஸ்டா பிரபலம் விஷ்ணுவை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

முன்னதாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த விஷ்ணு தன்னுடைய மனைவி அஸ்மிதாவிற்கும் ஏடிஜிபி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில் மனைவி கொடுத் புகாரின் அடிப்படையில் விஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார்.

Chennai police women safety tvk instagram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe