'Insta Reel' incident in chengalpattu

இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவேற்றும் ஆசையினால்வீடியோ எடுப்பதற்காக ரயில்வே தண்டவாளத்தில் இறங்கிய 3 மாணவர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் செங்கல்பட்டில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் செட்டிப்புண்ணியம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மோகன், பிரகாஷ். இவர்கள் தாம்பரத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ பயின்று வந்தனர். இவர்கள் இருவரும் அசோக்குமார் என்பவருடன் சேர்ந்து கொண்டு ரயில்வே தண்டவாளத்தில் வீடியோ எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுவெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை வழக்கம்போல மூன்று பேரும் தண்டவாளத்தில் நின்று கொண்டு வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

Advertisment

அப்போது சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மின்சார ரயில் அதிவேகத்தில் மூன்று பேர் மீது மோதியது. இந்தச் சம்பவத்தில் மாணவர்கள் 3 பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு ரயில்வே போலீசார் மாணவர்களின் உடலைக் கைப்பற்றி செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.