Advertisment

மகளுடன் சேர்ந்து இன்ஸ்டா ரீல்ஸ்; சிக்கலில் சிக்கிய பெண் காவல் ஆய்வாளர்

Insta reel with daughter... Inspector in trouble

Advertisment

அண்மைக்காலமாகவே சோசியல் மீடியாக்களில் வெளியாகும் சிலவீடியோக்கள் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தும். அந்த வகையில் பல இன்ஸ்டாரீல்ஸ்களும் அவ்வப்போது வெளியாகி சர்ச்சைக்குள்ளாகும். இந்நிலையில்பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் சீருடையில் தனது மகளுடன் சேர்ந்து வெளியிட்ட இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோவானது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் நிலைக்குத்தள்ளியுள்ளது.

சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் விஜயலட்சுமி. விஜயலட்சுமியின் மகள் சாரா தொடர்ந்து இன்ஸ்டாகிராமில்ரீல்ஸ் வெளியிடும் பழக்கம் கொண்டவர். அண்மையில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ''மம்மி இங்க கொஞ்சம்வாங்க... லவ் பண்ணலாம்னுமுடிவெடுத்திருக்கேன்'' என்று கூறுகிறார் சாரா. அதற்கு காவல் சீருடையில் இருக்கும் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி ''நடக்கிறத பாரு'' என்று கூறுகிறார். ‘மை டாக்சிக் ஃபிரண்ட்’ என்ற பெயரில் இந்த வீடியோ இன்ஸ்டாவில் பதிவேற்றப்பட்ட நிலையில், உயர் அதிகாரிகள் கவனத்திற்குச் சென்றது. அதனால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

instagram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe