Inspector's husband argues over inability to pay toll

திருவண்ணாமலை மாவட்டம் பெங்களூர் - பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் செங்கம் அடுத்த கரியமங்கலம் பகுதியில் இயங்கி வரும் சுங்கச்சாவடியில் காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் கட்டணமில்லாமல் சென்றுவர நிர்வாகம் அனுமதித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று செங்கத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி காரில் நண்பருடன் சென்றவர் சுங்க கட்டணம் செலுத்தச் சுங்கச்சாவடி ஊழியர்கள் அறிவுறுத்திய போது தன் மனைவி திருவண்ணாமலை பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரிவதாக மனைவி அடையாள அட்டையை காட்டியுள்ளார். ஆனால், ‘அவுங்க கார்ல இல்லையே..’ எனச் சொல்லியுள்ளார் ஊழியர். இதனால் ஆத்திரமடைந்த அவர், மனைவி அடையாள அட்டையை தவறாக பயன்படுத்தி தன்னை கட்டணம் இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

Advertisment

இதனை வீடியோ பதிவு செய்த சுங்கவரி ஊழியரை சரமாரியாக தாக்கி செல்போனை பிடுங்கி உடைந்த கூறப்படுகிறது. பதிலுக்கும் சுங்கச் சாவடி ஊழியர்கள் பெண் காவல்துறை ஆய்வாளரின் கணவர் மற்றும் நண்பர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. அங்கே நீண்ட நேரம் வாக்குவாதம் தகராறு ஏற்பட்டதால் பின்னால் இருந்த வண்டிகள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதன் பின் அங்கிருந்த வாகன ஓட்டிகள் பொதுவானார்கள் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். இருந்தும் சுங்கச்சாவடி ஊழியர்கள் சார்பில் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.