திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் சுகுமாரன் என்பவர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். தனது கடுமையான நடவடிக்கைகள் மூலம் மக்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் காவல் ஆய்வாளர் சுகுமாரன் மீது 27 வயது பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாலியல் புகார் ஒன்று அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரில் வழக்கு தொடர்பான விசாரணைக்கு சென்ற போதுகாவல் ஆய்வாளர் சுகுமாரன் தனக்கு செல்போனில் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என்று கூறியிருந்தார்.
இதனிடையே அந்த பெண் கொடுத்த புகாரின்அடிப்படையில் உரிய விசாரணை நடத்த மாநகர காவல் ஆணையருக்கு ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் காவல் ஆய்வாளர் சுகுமாரனைகாத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் சத்தியபிரியா உத்தரவிட்டுள்ளார்.இதனிடையே காவல் ஆய்வாளர் சுகுமாரனை சிங்கம் என்றுகூறி அவரை காதல்வயப்பட வைக்கும் வகையில் அந்த பெண்பேசும் ஆடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.