குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர்..! அதிரடி நடவடிக்கை எடுத்த டி.ஜி.பி.

Inspector who acted in favor of the criminals ..! DGP who took action

கோவை மாவட்டக் காவல்துறையில் தீவிர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்துவந்த கலையரசி, 6ஆம் தேதி திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கோவை மாவட்டக் காவல்துறையில் தீவிர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக கலையரசி பணிபுரிந்துவருகிறார்.இவர் கோவை மாநகர காவல்துறையில் கடந்த ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்துவந்தார்.

அப்போது மோசடி நிதி நிறுவனங்கள் மீது பெறப்பட்ட புகார் மனுக்களில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யாமல், மிகவும் காலதாமதமாக வழக்குப் பதிவுசெய்து, பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டதாக பல்வேறு புகார்கள் கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமியிடம் சென்றது.

எனவே அந்தப் புகார்கள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர்கள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், கலையரசி வழக்குப் பதியாமல் காலம் கடத்தியதும், பதிவுசெய்த வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டதும் உண்மை என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கோவை சரக காவல்துறை டி.ஐ.ஜி. முத்துச்சாமி, இன்ஸ்பெக்டர் கலையரசியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Coimbatore police
இதையும் படியுங்கள்
Subscribe