"நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழகத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சிலைகள் குறித்தான முழுஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்". என தொல்லியல் துறை தென்மண்டல இயக்குனர் நம்பிராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisment

 Inspection report on statues will be handed over to court; Statue detonation police information

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

நீதிமன்ற உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தொல்லியல் துறையினர் சார்பில் தமிழகக் கோயில்களில் உள்ள சிலைகளின் உண்மைத்தன்மை, தொன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisment

அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் தியாகராஜ சாமி திருக்கோயில் உள்ள திருமேனி பாதுகாப்பு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் திருவாரூர் தஞ்சை நாகை கடலூர் விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த 625 கோயில்களுக்கு சொந்தமான 4375 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ,ஜி, பொன், மாணிக்கவேல் மத்திய தொல்லியல்துறை தென்மண்டல இயக்குனர் நம்பிராஜன் ஆகியோர் தலைமையில் இரண்டு கட்ட ஆய்வுகள் முடிவுற்றுள்ளது. அதில் 504 சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன தொடர்ந்து மூன்றாவது கட்டமாக ஆய்வுப்பணிகள் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. 2வது நாளாக தொடங்கியது முதல் தினமான 14 ம் தேதி வரை 111 சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.

 Inspection report on statues will be handed over to court; Statue detonation police information

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

நேற்றைய தினம் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த திருமக்கோட்டை பரவாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் சிலைகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே தென் மண்டல இயக்குனர் நம்பிராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

"நீதிமன்ற உத்தரவின்படி தமிழகம் முழுவதும் சிலைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு தற்போது திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 1000 க்கும் மேற்பட்ட சிலைகள் சிலைகளின் உண்மைதன்மை ஆய்வுசெய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படும். சிலைகள் ஆய்வு செய்து முடிக்க்கும்கால அளவை கூற இயலாது". என்றார். மேலும் சிலைகள் ஆய்வு பணிகளின் போது கோயில்களின் ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக நம்பிராஜன் தெரிவித்தார்.