ADVERTISEMENT

அமைச்சரின் டுபாக்கூர் ஆய்வும் -மக்களின் குமுறலும்!

04:47 PM Aug 21, 2019 | kalaimohan

திண்டுக்கல் மாவட்ட முள்ளிப்பாடி அய்யன் குளம் தூர்வாரும் மராமத்துப் பணியை ஆய்வு செய்ய நேற்று காலை வந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிகாரிகள் மற்றும் ஆளும்கட்சிப் பிரமுகர்களின் கார்கள் புடைசூழ கம்பீரமாக கிராமத்துக்குள் நுழைந்தார். அவர் வருகிறார் என்று காலை 10 மணியில் இருந்து ஏரியாவாசிகள் காத்திருந்தனர். 12 மணியளவில்தான் அமைச்சர் வந்தார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எப்படி ஆய்வுசெய்தார்? என்பதை எரியாவாசிகளே விவரிக்கத் தொடங்கினார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

”அமைச்சர் கார்ல இருந்து இறங்கியதும் எங்கப்பா ஆய்வுக்குப் போகணும்?ன்னு கேட்க, அருகில் இருந்தவர்கள், அந்தக் கரைமேல் போகணும்ன்னு சொல்லி,அதை நோக்கிக் கை நீட்டினாங்க. அவ்வளவு தூராமா?ன்னு திகைச்ச அமைச்சர், மெதுவாக குளக்கரை நோக்கி நடக்க ஆரம்பிச்சார்.. அப்போது அவரோடு நடந்த அதிகாரியைப் பார்த்து... ‘நீ... நீங்க ஏ.இ.யா? ஜே.இ.யா? என்று கேட்டார். அதிகாரியோ, அதற்கு பதில் சொல்லாமல்.. தூர் வாரும் திட்டம் பற்றி பேப்பர்களைப் பார்த்து, தகவல்களை மடமடன்னு வாசிச்சார். அமைச்சரோ அதை காதுகொடுத்துக் கேட்காமல், இன்னொருவரைப் பார்த்து “யாருப்பா இந்த வேலையைப் பார்க்கற விவசாயத் தலைவரு?’ன்னு கேட்டார்.

இதைக்கேட்டு அவர் முன் வந்த ஒரு விவசாயி, வெட்கத்தோடு தலைசொரிய... அவரிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் “நீ எந்தக் கட்சிப்பா?” என்றார். இதைக்கேட்டு திகைத்த அந்த விவசாயி, சுதாரித்துக்கொண்டு, ஐயா நான் நம்ம அம்மாக் கட்சிதான்ன்னு சொன்னார். இதைக் கேட்டு “குட்” என்றார் மந்திரி. பிறகு. சில பேப்பர்களை வாங்கி அதைப் படிப்பது போல் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் மந்திரி. அடுத்து ”யாருப்பா ஜே.சி.பி.? இங்க வா?ன்னு குரல் கொடுக்க, பக்கத்தில் வந்த அந்த எந்திரத்தின் அருகே நின்று கொண்டு ஜே.சி.பி.யை கவர் பண்ணி படம் போட்டோவ எடுப்பா “ என்றார். படம் எடுத்ததும் ”ஏப்பா" இந்தக் குளத்துக்கு தண்ணி எங்கிருந்து வருதுப்பா?” என்றபடியே காரை நோக்கி நடந்தார். அமைச்சருடன் வந்திருந்த மாவட்ட ஆட்சியர், வாயையே திறக்காமல் பரிதாபமா நின்னாரு. இப்படி அதிகாரிகள் புடைசூழ வந்து அமைச்சர் போட்டோ எடுத்துக்கிட்டுப் போன நிகழ்ச்சிக்குப் பேரு ஆய்வாம்” என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள்.

இந்த பெரிய குளத்தை பலரும் ஆக்கிரமித்திருக்கிறார்கள். அதனால் இந்தக் குளத்தை முதலில் அளந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று கவிஞர் ஆறுமுகம் குழந்தை உள்ளிட்ட ஏரியாவாசிகள் பலரும் தொடர்ந்து குரல்கொடுத்தும் எதுவும் நடக்கவில்லை. அதேபோல் அந்தப் பகுதியில் இருக்கும் பாறைக்குட்டை மராமத்துப்பணி, அங்குள்ள தனி நபர் ஒருவரின் தலையீட்டால் பாதியில் நிற்கிறதாம். இதற்கெல்லாம் விடிவு எப்போது?

-சூர்யா

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT