Advertisment

 நீங்கள் சொன்னால் தானே  நாங்களும்  மக்களிடம் பேசும்போது எடப்பாடி அண்ணன்....

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 15 ஹெக்டேர் அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிரில் படைப்புழு நோய்த்தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டுபடுத்த நிலக்கோட்டை வேளாண்துறை சார்பில் மருந்துகள் தெளிக்கும் பணி நடைபெற்றது. இந்த மருந்து தெளிக்கும் பணி ஒட்டப்பட்டி கிராமத்தில் மக்காச்சோள காட்டில் நடந்தது. அந்த பணியினை நிலக்கோட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது வேளாண்துறை அதிகாரிகள் படைபுழுக்களை கட்டுப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளிடமும் எம்எல்ஏ விடமும் விளக்கம் அளித்தனர்.

Advertisment

inspection by admk MLA

அப்பொழுது எம்எல்ஏ தேன்மொழி "படைப்புழு கட்டுப்படுத்தும் முறையை தெளிவுபடுத்துங்கள்" என்று அதிகாரிகளிடம் கூறினார். அப்பொழுது வேளாண்மைத்துறை அதிகாரிகள் "படைப்புழு ஒழிப்பது சம்பந்தமாக விவசாயிகளிடம் தெளிவாக சொல்லிவிட்டோம். படைப்புழு ஒழிப்பதற்கு அரசு ஒரு எக்டருக்கு 4500 ரூபாய் மருந்து தெளிப்பதற்கு அரசு நிவாரண உதவி கொடுக்கிறது" என்று கூறினார்.

Advertisment

அதைக்கேட்ட எம்எல்ஏ "அதனால் தான் நானும் விளக்கமாக உங்களிடம் சொல்லச் சொன்னேன். நானும் ஒரு விவசாயி தான் இப்படி எடப்பாடி அண்ணன் விவசாயிகளுக்கு என்னென்ன உதவிகள் செய்கிறார் என்பதை எங்களிடம் நீங்கள் சொன்னால் தானே நாங்களும் மக்களிடம் பேசும்போது எடப்பாடி அண்ணன்.... என்னென்ன செய்தார் என்று விவசாயிகளிடமும் மக்களிடமும் சொல்லமுடியும்" என்று பேச்சுக்கு பேச்சு எடப்பாடி புகழவே எம்.எல்.ஏ தேன்மொழி பாடினர் அதைக்கேட்டு அருகே இருந்த விவசாயிகளோ மந்திரி சபை மாற்றம் ஏதும் வந்தால் "எம்.எல்.ஏ அக்காவுக்கு மந்திரி பதவி கிடைக்கப்போவது உறுதி" என்று குரல் கொடுத்ததை கண்டு எம்.எல்.ஏ தேன்மொழியும் பூரித்துப் போய்விட்டார்.

அதை தொடர்ந்து நிலக்கோட்டை தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள விவசாயிகளின் பிரச்சினையில் உடனடியாக தீர்வு காண வேண்டும் என வேளாண் துறை அதிகாரி சுருளியப்பனிடம் வேண்டுகோள் விடுத்தார். இந்த ஆய்வின்போது வேளாண்துறை அதிகாரிகள் விவசாயிகள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

admk farmland inspection MLA
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe