Advertisment

எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவரின் கட்டடங்களில் ஆய்வு! 

Inspection of the buildings of people close to S.P. Velumani!

Advertisment

அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நெருக்கமானவரான ராஜேந்திரன் என்பவரின் ஜே.ஆர்.டி. ரியல் எஸ்டேட் நிறுவனம் கட்டியுள்ள வீடுகளில் கோவை மாநகராட்சி அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வின் போது, வீடுகள் உரிய அனுமதிப் பெற்று முறையாகக் கட்டப்பட்டிருக்கின்றதா, கட்டடம் தரமானதாக இருக்கின்றதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் கூறுகின்றன.

ஜே.ஆர்.டி. குழுமம் என்பது கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வருகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகளைக் கட்டி விற்பனை செய்து வருகிறது. இந்த சூழலில், இவர்கள் கட்டி விற்பனை செய்த பல வீடுகள் மாநகராட்சியிடம் அனுமதிப் பெற்றதற்கு குறைவாகவோ, அதிகமாகவோ அளவீடுகள் உள்ளதாகபுகார் எழுந்தது. அதன் அடிப்படையில் தற்போது மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Corporation Coimbatore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe