Insist on Farmers' Conference to announce crop insurance scheme for cashew farmers

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் மண்டபத்தில் ஜனநாயக விவசாயிகள் சங்கம் சார்பில் முந்திரி விவசாயிகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.

Advertisment

இம்மாநாட்டில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் முந்திரி உற்பத்தியில் கையாள வேண்டிய செய்முறைகள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதியின் விளைவுகள் குறித்து விளக்க உரையாற்றினர்.

Advertisment

மேலும் மாநாட்டில் முந்திரிக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்கவும், 2022- 2023 ஆண்டிற்கு பாதிக்கப்பட்ட முந்திரி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிடவும், முந்திரி பயிருக்கு பயிர் காப்பீடு திட்டத்தினை செயல்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்து மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Insist on Farmers' Conference to announce crop insurance scheme for cashew farmers

மேலும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற மண்ணை மலடாக்கும் விவசாயத்திற்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தும் மத்திய அரசை கண்டித்தும், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்பு திட்டம் என்ற பெயரில் விவசாயம் செய்யும் நிலத்தைப் பறித்து, பெரிய நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் திட்டத்தை அறிவித்த தமிழக அரசைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisment

இம்மாநாட்டில் முந்திரி விவசாயிகள், உழவர் அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.