Advertisment

மார்க்கெட் உள்ளே பட்டப்பகலில் தலையில் கல்லைப்போட்டு ஒருவர் கொலை!

புதுச்சேரியில் மையப்பகுதியில் உள்ளது நெல்லித்தோப்பு மார்க்கெட். இங்கு ஆடு, மீன், காய்கறி உள்ளிட்ட கடைகள் விடியற்காலை முதல் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெறும். இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் மார்க்கெட் உள்ளே தமிழ்வாணன் என்பவரும் அவருடன் பணியாற்றும் சேகர் என்கிற பாபு ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சேகர் தமிழ்வாணன் தலையில் அருகில் இருந்த கல்லை எடுத்து போட்டுவிட்டு தப்பியோடி உள்ளார். தமிழ்வாணன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

Advertisment

Inside the market;bad incident a stone on his head!

இதுகுறித்து போலீசார் விசாரணையில் சேகரும் , தமிழ்வாணனும் ஒரே இடத்தில் வேலை செய்து வருவதாவும், இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என்றும் அப்படி ஏற்பட்ட தகராறில் தமிழ்வாணன் மீது கல்லை போட்டு சேகர் கொலை செய்துள்ளார் என்றும் தெரியவந்தது. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள மார்க்கெட் உள்ளேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

murder Puducherry
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe