தமிழ்நாடுமுதல்வர் மு.க. ஸ்டாலின் 'மக்களைத் தேடி மருத்துவம்', 'இல்லம் தேடி கல்வி' உள்ளிட்ட திட்டங்களை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், தற்போதுநம்மைக் காக்கும் 48 என்ற 'இன்னுயிர் காப்போம்' திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் இத்திட்டத்தை முதல்வர் தொடங்கிவைத்தார். விபத்துஏற்பட்டால்'இன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் 610 மருத்துவமனைகளில் 48 மணிநேரம் இலவச சிகிச்சை அளிக்கப்படும். அதேபோல் விபத்தில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் நபருக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.