ADVERTISEMENT

"உழவுக் கருவிகளைப் பரண் மேல் போடவேண்டியதுதான்" - கலங்கும் விவசாயியின் நூதனப் போராட்டம்!

05:44 PM Dec 25, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த ஒரு மாத காலமாகக் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் டெல்லியில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதில், பலர் உயிர்த்தியாகமும் செய்துள்ளனர்.

இந்நிலையில், "அவர்களோடு தோள் கொடுத்து டெல்லி சென்று போராடவேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் உலகத்தில் உள்ள மற்ற உயிரினங்களுக்கும், சக மனிதர்களுக்கும் உணவு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வயல்வெளிகளில் எனது பணியைச் செய்து கொண்டே எங்களது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் கூறும் அரியலூர் விவசாயி பலரது கவனத்தையும் பெற்றுள்ளார்.

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகில் உள்ள, செட்டித்திருக்கோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் இராமசாமி, இவர் விவசாயம் செய்து வருகிறார். டெல்லிப் போராட்டம் குறித்து அவர் கூறுகையில், "ஊருக்கு உழைக்கும் உழவன், உற்பத்தி செய்துதரும் பொருளுக்கு முறையான விலையில்லை. இதே நிலை நீடித்தால், உழவுக் கருவிகளைப் பரண் மேலே போடவேண்டிய நிலைவரும்" என வருத்தத்துடன் தனது கருத்தைப் பதிவு செய்தார் இராமசாமி. மேலும், மாட்டின் முதுகில் கேள்விக்குறியை (புல்லைக் கொண்டு) வரைந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT