
கடந்த ஒரு மாதகாலமாகக் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் டெல்லியில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதில், பலர் உயிர்த்தியாகமும்செய்துள்ளனர்.
இந்நிலையில், "அவர்களோடு தோள் கொடுத்து டெல்லி சென்று போராடவேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் உலகத்தில் உள்ள மற்ற உயிரினங்களுக்கும்,சக மனிதர்களுக்கும் உணவு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வயல்வெளிகளில் எனது பணியைச் செய்து கொண்டே எங்களது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் கூறும் அரியலூர் விவசாயி பலரது கவனத்தையும் பெற்றுள்ளார்.
அரியலூர்மாவட்டம், வி.கைகாட்டி அருகில் உள்ள, செட்டித்திருக்கோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் இராமசாமி, இவர் விவசாயம் செய்து வருகிறார். டெல்லிப் போராட்டம் குறித்து அவர் கூறுகையில்,"ஊருக்கு உழைக்கும் உழவன், உற்பத்தி செய்துதரும் பொருளுக்கு முறையான விலையில்லை.இதே நிலை நீடித்தால், உழவுக்கருவிகளைப் பரண் மேலே போடவேண்டிய நிலைவரும்" என வருத்தத்துடன் தனது கருத்தைப் பதிவு செய்தார் இராமசாமி. மேலும், மாட்டின்முதுகில்கேள்விக்குறியை(புல்லைக் கொண்டு) வரைந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.இது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)