Advertisment

வீட்டின் கூரை மீது பாய்ந்து தலைகீழாக தொங்கிய இனோவா கார்!

Innova car hanging upside down on the roof of the house!

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை அகரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (40) விபத்தில் சிக்கிய இவருடைய உறவினர் ஒருவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக மகேஷ் பரங்கிப்பேட்டை அகரம் பகுதியைச் சேர்ந்த அறிவழகன், சாந்தி, கஜம் மூர்த்தி, கார்த்தி, சதீஷ், சிவக்குமார் ஆகிய 7 பேருடன் காரி புதுச்சேரிக்கு நேற்று மாலை புறப்பட்டார். காரை மகேஷ் அதிக வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார் அப்போது பரங்கிப்பேட்டை அருகே கரிக்குப்பம் பகுதியில் சென்றபோது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி அதே வேகத்தில் சினிமாவில் வரும் காட்சியைப்போல் இனோவா கார் பறந்து சாலையோரம்இருந்த வீட்டின் கூரை மீது தலைகீழாகத் தொங்கியது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள். அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

Advertisment

இந்த விபத்தில் மகேஷ் உட்பட 7 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் மகேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்கள் சிதம்பரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

car incident accident chithambaram district
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe