Published on 24/05/2018 | Edited on 24/05/2018
தூத்துக்குடி போராட்டக்களத்தில் 25 வயதான மணிராஜ் என்பரும் பலியானார். இவர் எலெட்ரிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். கடைசி 3 மாதங்களுக்கு முன்பு பேச்சியம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்து இருந்தார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த 100-வது நாள் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசாரின் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி கர்ப்பமாக இருக்கிறார். மணிராஜ் பலியான சம்பவம் அவரது குடும்பத்தை பெரிதும் பாதித்துள்ளது.