புதுக்கோட்டை மாவட்டத்தில் மது போதையைவிட மாற்றுப் போதைக்கு இளைஞர்களை ஒரு பெரிய கும்பல் மாற்றி வருகிறது என்பதை அறிந்த போலிசார் மாற்றுப் போதைக்காக மாத்திரை, ஊசிகளை விற்பனை செய்யும் கும்பலை கைது செய்து வருகின்றனர். தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உறுப்பினர் ஆனந்த் இந்தியா முழுவதும் இந்த மாற்றுப் போதை கும்பலை உடனே கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதுடன் ஒவ்வொரு மாநிமாக சென்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறார்.

Advertisment

 Injection and pills for alternative drug for youth and students

Advertisment

இந்த நிலையில் கடந்த மாதம் புதுக்கோட்டையில ஒரு பெண் வலி நிவாரணி மருந்து மாத்திரைகளை இளைஞர்களை மாணவர்களை குறிவைத்தும், அரசியல்வாதிகளுக்கும் போதை ஊசிகளாக விற்றுவந்ததையடுத்து கைது செய்யப்பட்டார். தொடர்ந்த 15 நாட்களுக்கு முன்பு அறந்தாங்கி அருகில் உள்ள அரசர்குளம் பகுதியில் இளைஞர்களிடம் போதைக்காக மாத்திரை விற்க வந்த புதுக்கோட்டை முன்னாள் ஆணழகன் ரியாஸ் கான், ஜெகன் ஆகிய இருவரையும் நாகுடி எஸ் ஐ நவீன் கைது செய்தார். அவர்களிடம் நடத்திய விசாரனையில் மேலும் பலர் அந்த கும்பலில் இருப்பதையறிந்து அறந்தாங்கி டிஎஸ்பி கோகிலா தலைமையிலான குழுவினர் புதுக்கோட்டையில் பதுங்கியிருந்த ஒரு பெண் உள்பட 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த 2500 மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரனையில் புதுக்கோட்டையில் மேலும் பலர் பதுங்கியிருந்து போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்வது தெரிய வந்தது.

இந்த தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட எஸ் பி செல்வராஜ் தனிக் குழு அமைத்து ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருக்கோகர்ணம் காவல்நிலைய எல்லையில் மியூசியம் பகுதியை சேர்ந்த 6 பேர் மாத்திரைகள் விற்பதை கையும் களவுமாக பிடித்தனர். இதன் பிறகு மத்திய புலனாய்வு துறையும் இணைந்து களமிறங்கி மாற்றுப் போதைக்கு இளைஞர்களை மாற்றி அடிமையாக்கும் கும்பலை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

மேலும் இந்த கும்பலை கட்டுப்படுத்த அனைத்து துறை அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்தநிலையில்தான் அறந்தாங்கி நாகுடியில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இளைஞர்கள், மாணவர்கள், மாணவிகளை குறிவைத்து போதைக்காக வலி நிவாரண மாத்திலை ஊசி மருந்துகளை விற்று கைதான மாஜி புதுக்கோட்டை ஆணழகன் ரியாஸ்கான், ஜெகன், வினோதன், வாசு, பானுமதி ஆகிய 5 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதே நடவடிக்கை தொடர்ந்தால் மாற்றுப் போதையில் இருந்து இளைஞர்களை மீட்களாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.