Skip to main content

கரோனா காலத்தில் பசியை போக்க உதவுதாக  8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... நான்கு பேர் கைது!!

Published on 06/06/2020 | Edited on 06/06/2020
inicident in kanyakumari thengaipatinam

 

குமரி மாவட்டம் தேங்காய்பட்டணத்தில் ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறது அந்த ஏழை குடும்பம். கரோனா பாதிப்பால் கோழிக்கடையில் வேலை பாா்த்து வந்த அப்பா வேலையிழந்து வீட்டில் முடங்கியுள்ளார். மனநிலை பாதிக்கப்பட்ட தாயும் வீட்டுக்குள்ளே இருக்கும் நிலை. இதனால் சாப்பாட்டுக்கு வழியில்லாததால் தாய் தந்தையின் பசியை போக்க 8 வயது சிறுமி அந்த பகுதியில் உதவி கேட்டு வீடு வீடாக சென்று வந்தார்.


உதவி செய்யும் நல்ல மனம் கொண்ட என பலரும் காசு, சாப்பாடு கொடுத்து உதவினார்கள். இதில் சில காட்டு மிராண்டிகளான முதியவர்கள் முகமது நூகு (75), அப்துல் ஜபார் (66), ஜாகீர் உசேன் (53), சகாயதாசன் (52) ஆகிய 4 பேரும் தனித்தனியாக ஒருவருக்கு ஒருவர் தொியாமல் சிறுமிக்கு உதவுவதாக கூறி தினமும் அந்த சிறுமியை பாலியல் இச்சைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். அறியா பருவத்தில் இருக்கும் அந்த சிறுமி இதை செய்தாதான் உதவி செய்கிறார்கள் என நினைத்து அடிக்கடி அந்த காட்டு மிராண்டிகள் அழைக்கும்போது சென்றியிருக்கிறார். ஒருகட்டத்தில் இதை அந்த பகுதியில் உள்ள 2 சிறுவர்களும் பார்த்து அவா்களும் அந்த சிறுமியை தென்னந்தோப்புக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள்.

இந்தநிலையில் இரண்டு தினங்களுக்கு முன் அந்த சிறுமி நடப்தை எல்லாம் தந்தையிடம் கூறியிருக்கிறார். இதனால் அதிா்ச்சியடைந்த தந்தை ஊாில் உள்ளவா்களிடம் கூறியிருக்கிறார். உடனே ஊாில் உள்ளவா்கள் சிறுமி கூறியதையெல்லாம் வீடியோவாக பதிவு செய்து மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத்திடம் கொடுத்தனர்.

 

 


அதனை குளச்சல் ஏஎஸ்பிக்கு விசாரணைக்கு உத்தரவிட்டார் எஸ்பி. இதனையடுத்து விசாரித்து இந்த கொடூரத்தை அரங்கேற்றிய அந்த 4 காட்டு மிராண்டிகள் மற்றும் 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனா். பின்னா் 4 பேரையும் சிறைக்கு அனுப்பிவிட்டு, 2 சிறுவா்களை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினார்கள்.

தேங்காய்பட்டணம் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பேசிய தமுமுக மாவட்ட தலைவா் ஜிஸ்தி முகம்மது, “சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அவா்களுக்கு கடுமையான தண்டனையை காவல்துறை வாங்கி கொடுக்க வேண்டும். இ்ந்த சம்பவத்தில் வேறு யாரேனும் ஈடுபட்டியிருந்தால் அவா்களையும் கைது செய்ய வேண்டும். மேலும் அந்த ஏழை குடும்பத்துக்கு நிரந்தரமான ஒரு வருவாயை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்” என்றார்.

 

சார்ந்த செய்திகள்