சென்னையில் அடுக்குமாடி கட்டிடங்களுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கட்டணம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் அடுக்குமாடி கட்டிடங்களுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கட்டணம் சதுர மீட்டருக்கு 198 ரூபாய் என இருந்த நிலையில் அதனை சதுர மீட்டருக்கு 20 ரூபாய் உயர்த்தி அறிவித்துள்ளது சிஎம்டிஏ எனும் பெருநகர வளர்ச்சி குழுமம். இதனால் அடுக்குமாடி கட்டிடங்களுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கட்டணம் சதுர மீட்டருக்கு 218 ரூபாயாக உயர இருக்கிறது. இந்தக் கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்ட அனுமதிபெற உள்கட்டமைப்பு நிதி செலுத்துவது கட்டாயம் எனவும் சிஎம்டிஏ அறிவுறுத்தியுள்ளது.