Advertisment

தூங்கிவழியும் தமிழக தகவல் ஆணையம்-அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு!!

தமிழக மாநில தகவல் ஆணையம் தூங்கிவழியும் நிலையில் செயல்பாட்டில் தோய்ந்து இருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அறப்போர் இயக்கம் சார்பில் கூறப்பட்டதாவது,

Advertisment

arappor iyakkam

2005-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஆர்.டி.ஐ எனும் தகவல் அறியும் உரிமை சட்டம் தேசிய அளவில் மட்டுமின்றி மாநில அளவிலும்நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தமிழக தகவல் ஆணையம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த தகவல் ஆணையத்தின் முக்கியமான பணி வழக்கு தொடருவதற்கும், அதன் பிறகான மேல் முறையீட்டிற்கும் முன் தகவல்களை பெற வழிவகை செய்வதே ஆகும். தகவலுக்காக விண்ணப்பிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் ஆணையம் பதிளிலக்க வேண்டும் போன்ற விதிகள் இருக்கிறது. ஒரு வழக்கின் இரண்டாவது மேல்முறையீட்டில் பொழுது அதிகபட்சமாக மேல்முறையீட்டாளர் 15 மாதங்கள் காத்திருக்கவேண்டியுள்ளது.முதலில் வரும் விண்ணப்பத்திற்குத்தான் முதலில் தகவல் வழங்க வேண்டும் என்ற கொள்கை பின்பற்றப்படுகிறது. அதேபோல் மூன்று மாதத்திற்குள் விசாரித்து அதற்கான தீர்வை கொடுக்கவேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும் 6 மாதங்கள் காத்திருந்து தகவலை அறிந்து கொள்ளும் சூழலே நிலவுகிறது.

மேல்முறையீடு செய்பவர்கள் 17 % மேற்பட்டவர்கள்ஒரு வருடத்திற்கு மேல் காத்திருக்க வேண்டி வருகிறது,13 % பேர் 10 முதல் 12 மாதங்கள் வரைகாத்திருக்க வேண்டிய வருகிறது,24 % பேர் 7 முதல் 9 மாதங்கள் காத்திருக்க வேண்டி வருகிறது, 26 % பேர் 4 முதல் 6 மாதம் வரை காத்திற்காக வேண்டி வருகிறது அதேபோல் 20 % பேர் 3 மாதங்கள் காத்திருக்கின்றனர். பெருபாலானோர் தகவல் அறிய நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் என்ற சூழலே நிலவுகிறது.

Advertisment

arappor iyakkam

2016-ம் ஆண்டில் தமிழக தகவல் ஆணையத்தின் கீழ்1135 மேல்முறையீடு மனுக்கள்விசாரணைக்காக நிலுவையிலுருந்தது. 2017-ஆம் ஆண்டு முடிவில் பலமடங்கு அதிகரித்து 5220 மனுக்கள் நிலுவையில் இருந்தது. 2014-ஆம் ஆண்டில் தகவல் ஆணையத்திலிருக்கும்ஒரு ஆணையர் சராசரியாக 165 மேல்முறையீடு வழக்குகளை விசாரித்து முடித்தனர். ஆனால் 2018-ஆம் ஆண்டு வெறும் 48பேருடைய மேல்முறையீட்டு மனுக்கள்தான் ஒரு ஆணையரால் விசாரிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 7 தகவல் ஆணையர்களை கொண்ட தகவல் ஆணையத்தில் தகவல் ஆணையர்களால் மொத்தமாக ஒருமாதத்தில் 267 மேல் முறையீடுகளை விசாரிக்ப்பட்டு முடிக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும் வெறும் 48 முறையீடுகள் தான் விசாரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஒரு வழக்கு தொடுக்கப்பட்ட பின் அந்த வழக்கின் மனுவின் நிகழ்தகவலை காண்பதற்கான தெரிந்து கொள்வதற்கான இணையதள வசதிகள் போன்றவை மற்ற மாநிலங்களை விட இங்கு முறையாக செயல்படுத்தபடவில்லை.

2014-ஆம் ஆண்டு 165 வழக்குகள் விசாரிக்கப்பட்டது, 2016-ல் 163 ஆக குறைந்தது,2017-ல் 107 ஆக குறைந்தது,

2017 -லில் 96ஆக குறைந்து இறுதியில் 2018-ல் 48 ஆக குறைத்துள்ளது. மொத்தம் உள்ள 7 ஆணையர்களில் ஷீலா ப்ரியா என்ற ஆணையர் தமிழக தலைமை தகவல் ஆணையராக செயல்பட்டு வருகிறார். தலைமை ஆணையரான ஷீலா ப்ரியா 2018-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து தற்போதுவரைமொத்தம் விசாரித்த வழக்கு 37,செல்வராஜ் என்ற ஆணையர் 112,பிரதாப்குமார் என்ற ஆணையர் 63, முருகன் என்ற ஆணையர் 35,எஸ்பி.தமிழ்க்குமார் என்ற ஆணையர் 32,முத்துராஜ் என்ற ஆணையர் 15, தக்ஷணாமூர்த்தி என்ற ஆணையர் 46 இந்த கணக்குகளின் அடிப்படையில் மாதத்திற்கு 48 வழக்குகள்தான் விசாரிக்கப்படுகிறது.

மாநில தகவல் ஆணையம் ஒரு மாதத்திற்கு 200 வழக்குகளை முடிக்கவேண்டும் அதன்படி பார்த்தால் ஒரு நாளைக்கு 10 வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும் ஆனால் இது சரியாக கடைபிடிக்க படுவதே இல்லை. அதேபோல் இந்த தொய்விற்கு காரணமாக மாநில தகவல் ஆணையம் அளிக்கும் பதில் சரியான நீதிமன்றங்கள் இங்கு கிடையாது, வெறும் மூன்றே மூன்று கோர்ட் ஹால்மட்டுமே உள்ளது என முன்வைக்கிறது. ஆனால் ஒரு வருடத்திற்கும் வாடகை மட்டும் அரசு 1 கோடியே 10 லட்சத்தை ஒதுக்குகிறது. அப்படி எனில் ஒரு மாதத்திற்கு 9 முதல் 10 லட்சம் ஆகிறது இப்படி இருந்தும் சரியாக செயல்படாததகவல் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அபராதங்கள்விதிக்கப்பட்டால் மட்டும்தான் இதை ஒழுங்குபடுத்தி நெறிப்படுத்த முடியும் ஆனால் அரசு இதை செய்ய தவறுகிறது.

அதேபோல் மாநில தகவல் ஆணையர் நியமிக்கப்படும் முறையில்ஆணையராக பொறுப்பேற்பவரின் பணி அனுபவம்,கல்வி தகுதி போன்றவை கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆணையர் பணி நியமனம் செய்ய அரசு முன்னெடுத்தால் தான் இந்தபோக்கிற்கு முடிவு கிடைக்கும் என்று அறப்போர் இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

tn govt arappor iyakkam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe