Infection leading to driver to made wrong decision

Advertisment

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த பிச்சைமணி என்பவர் சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்துவருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்திருந்தார். அவருக்கு கரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் இருந்ததை அறிந்த அவர், மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். இந்நிலையில், நேற்று (25.05.2021) இரவு முழுவதும் அவரைக் காணாமல் உறவினர்கள் தேடிவந்த நிலையில், அருகில் உள்ள தோட்டத்தில் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.