பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை!

infant passed away dindigul

திண்டுக்கல்லை அடுத்துள்ள பிள்ளையார் நத்தத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்.இவரது மனைவி சுகன்யா. விஜயகுமார் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர்கள் தற்பொழுது நல்லாம்பட்டி பகுதியில் வசித்து வருகின்றனர்.விஜயகுமார் - சுகன்யா தம்பதிக்குஏற்கனவே மூன்று வயதில் ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் விஜயகுமார் - சுகன்யாவிற்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு இரண்டாவதாக குருபிரசாத் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை குருபிரசாத்திற்கு நேற்று ஆலமரத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 45 நாள் தடுப்பூசி போடப்பட்டது. ஊசி போட்டதன் காரணமாக குழந்தைக்கு காய்ச்சல் அடித்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை குழந்தை குருபிரசாத் தாய்ப்பால் குடித்துள்ளார். சிறிது நேரத்திற்கெல்லாம் வாய், மூக்கு ஆகியவற்றிலிருந்து ரத்தம் வந்துள்ளது. இதனால் பதறிப்போன பெற்றோர்உடனடியாக குழந்தையைத்தூக்கிக்கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். குழந்தையைபரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதனை அடுத்து தற்பொழுது குழந்தை இறந்ததற்கான காரணம் தெரியாமல் குழந்தையின் பிரேதத்தை வாங்க மாட்டோம் எனப்பெற்றோர்கூறி வருவதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

dindugal Infant police
இதையும் படியுங்கள்
Subscribe