Advertisment

பெண்கள் பள்ளியில் இறந்து கிடந்த பச்சிளம் குழந்தை

Infant found passed away in girls' school in Trichy

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிறந்து சில மணி நேரங்களிலேயே இறந்த நிலையில் கிடந்த ஆண் சிசுவைதிருவெறும்பூர் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கழிவறை அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆன நிலையில் இறந்த நிலையில் ரத்தத்துடன்ஆண் சிசுகிடந்துள்ளது. இது பற்றி திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த ஆண் குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

இந்தச்சம்பவம் பற்றி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் சந்திர தேவநாதனுக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த குழந்தை தவறான உறவில்மாணவிக்கோ அல்லது ஆசிரியைக்கோபிறந்ததா அல்லது வேறு யாரேனும் கொண்டு வந்து இங்கு குழந்தையை வீசிச் சென்றார்களா என்று பல கோணங்களில் திருவெறும்பூர் போலீசாரும்சந்திர தேவநாதனும்தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

school trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe