Advertisment

"ஏலகிரியில் உள்விளையாட்டரங்கம்" - சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு!

publive-image

Advertisment

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது பேசிய அமைச்சர் மெய்யநாதன், "ஏலகிரி மலைப்பகுதியில் உள்விளையாட்டரங்கம் அமைக்க ரூபாய் 4.75 கோடி நிதிக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விளையாட்டு கட்டமைப்புகளை உலகத் தரத்திலான கட்டமைப்புகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, "தமிழ்நாட்டில் 14 சுங்கச் சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும்.ஆனால், 48 சுங்கச் சாவடிகள் உள்ளன. மீதமுள்ள சுங்கச் சாவடிகளை மூட மத்திய அரசிடம் வலியறுத்தியுள்ளோம்" எனத் தெரிவித்தார். மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லாவின் கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்தின்போது அமைச்சர் இவ்வாறு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Announcement minister tn assembly
இதையும் படியுங்கள்
Subscribe