Skip to main content

பட்டியலின மக்களின் சுடுகாடு ஆக்கிரமிப்பு; விசிகவினர் கண்டன பேரணி

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
individual who encroached on a crematorium

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ள நாயக்கனேரி  மக்கள் காலம் காலமாகப் பயன்படுத்தி வந்த பொதுவெளியில், சிலர் முள்வேலி அமைத்துவிட்டதாகக் கூறி நாட்றம்பள்ளி வட்டாட்சியர் குமாரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர். அதேபோல் சின்ன மோட்டூர் பகுதியில் பட்டியலின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அம்பேத்கர் சிலை வைப்பதற்கு மனு அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளானூர் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டு இடத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஒன்றிணைந்து நாட்றம்பள்ளி வட்டாட்சியர் குமாரை கண்டித்து பொம்மை பாடையைக் கட்டிக்கொண்டு நாட்றம்பள்ளி பேரூராட்சியில் இருந்து நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாகச் செல்ல முற்பட்டனர்.

இதன் காரணமாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நாட்றம்பள்ளி போலீசார், விசிகவினர் கொண்டு வந்த பொம்மை பாடையை அப்புறப்படுத்தினர். மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து, போலீசார் மற்றும் வட்டாட்சியர் குமார் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் காரணமாக அனைவரும் கலைந்து சென்றனர்.

சார்ந்த செய்திகள்