Advertisment

துணிக்கடையில் பேரம்பேசுவதில் தகராறு: ஆம்புலன்ஸ் டிரைவர் அடித்து கொலை!

விழுப்புரம் அருகேயுள்ளது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை. இது24 மணி நேரமும் இயங்குவதால் இப்பகுதி எப்போதும் பரபரப்பாக செயல்படும் இடம். இந்த பகுதியில் அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் ஏராளமாகநிற்கும். இதற்கான ஓட்டுனர்களும் பலர் அங்கேயே இருப்பார்கள்.

Advertisment

indiscipline incident in vilupuram

அப்படிப்பட்ட ஓட்டுனர்களில் ஒருவர் வட குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த தினேஷ். இவர் மருத்துவமனை அருகில் ரெடிமேடு துணிக்கடை வைத்துள்ளார். முண்டியம்பாக்கம் முருகையன் கடையில் பனியன் எடுக்க சென்றார் தினேஷ். அப்போது விலை பேரம்பேசும் போது முருகையனுக்கும் தினேஷுக்கும்இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அப்போது முருகையன் தனது மகன் ஆகாசுக்கு போன் செய்து தகராறு பற்றி விஷயத்தை சொல்ல, கடும் கோபத்துடன் தனது நண்பர்களோடு வந்த ஆகாஷ் தினேஷை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

Advertisment

இதில் பலத்த காயமடைந்த தினேஷை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுபோய் சேர்த்தனர். தினேஷை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து போனதாக தெரிவித்தனர். இதையடுத்து தினேஷின் உறவினர்கள் புகாரையடுத்து விக்கிரவாண்டி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து கடைகாரர் முருகையன் அவரது மகன் ஆகாஷ் அவரது நண்பர்கள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். முண்டியம்பாக்கம் முருகையன், அவரது மகன் ஆகாஷ் கைது சம்பவம் நடைபெற்ற இடத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நெரில் சென்று பார்வையிட்டார். இந்த சம்பவத்தால்மருத்துவமனை பகுதியே பரபரப்பாகியுள்ளது.

Ambulance driver murder police Viluppuram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe