Advertisment

கணவன்,குழந்தையை கொலை செய்த மனைவி! -பரபரப்பு பின்னணி தகவல்கள்!

வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த தாஜ்புராபகுதியை சேர்ந்த பெயிண்டரான 25 வயதான ராஜாவுக்கும் அவரது 20 வயது மனைவி தீபிகாவுக்கும் திருமணமாகி ஒரு வயதில் பிரனீஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. தனது கணவர் மற்றும் குழந்தை கடந்த 13ந்தேதி முதல் காணாமல் போனதாக தீபிகா ஆற்காடு கிராமிய காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

Advertisment

indiscipline incident in vellore!- police investigation

போலிஸார் விசாரணை செய்தபோது, முன்னுக்கு பின் முரணாக தீபிகா பேசினார். அதேபோல் ராஜாவின் அக்கா லட்சுமி போலிஸாரிடம் தீபிகா மீது சந்தேகம் எழுப்பினார். இதையடுத்து தீபிகாவிடம் விசாரணையை கடுமையாக்க, தனது கணவர் மற்றும் குழந்தையை கொலை செய்து பக்கத்தில் உள்ள ஏரியில் புதைத்துள்ளதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

Advertisment

அந்தயிடத்தை தோண்ட முடிவு செய்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கூறினர். மே 17ந்தேதி மதியம் உடலை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்தபின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அப்போது ராஜாவின் உறவினர்கள் தீபிகாவை தாக்க முயல போலிஸார் அவரை காப்பாற்றி காவல்நிலையம் அழைத்து சென்றனர். மேலும் காவல்நிலையத்தில் வைத்து, தீபிகாவிடம் தொடர் விசாரணை ஈடுபட்டுக் கொண்டனர். தீபிகாவை கைது செய்து 24 மணி நேரமானதால், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆற்காடு நீதிபதி பத்மாவதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தீபிகா மட்டும் தனியே கொலை செய்து ஏரிக்கரையில் புதைக்க முடியாது என்கிற சந்தேகம் ஏற்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தியபோது ராஜாவின் நண்பரும், தீபிகாவின் கள்ளக்காதலன் எனச்சொல்லப்படும் தாஜ்புரா பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் பெயர் பிடிப்ப அவரை பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

child murder police Vellore wife
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe