நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் பேஸ்புக் சாட்டிங்கில் மூழ்கிக்கிடந்த மனைவியை அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் காமராஜர் தெருவை சேர்ந்தவர் கோமதிசெல்வம். கட்டிட தொழிலாளியான இவரின் மனைவி முத்துமாரிகடந்த வியாழக்கிழமை மாலை வீட்டின் உள்ளே மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தார். இதுகுறித்து செய்திகேட்ட கணவர் கோமதிசெல்வம் பதறியடித்துக்கொண்டு சடலத்தை கண்டு கதறி கண்ணீர் வடித்தார்.

indiscipline incident in nellai sangarankovil!

Advertisment

இந்த கொலை சம்பவம் குறித்து அங்கு வந்த போலீசார் விசாரணை செய்து உடலை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் கொலையாளியை கண்டுபிடிக்கமோப்ப நாய் வைக்கப்பட்டது. ஆனால் நாய் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டை சுற்றி சுற்றியே வந்தது. அதனையடுத்து கைரேகை நிபுணர்களைவைத்து செய்த சோதனையின் அடிப்படையில் போலீசாரின் கவனம் கணவர் கோமதிசெல்வம் மீது திரும்பியது.

Advertisment

indiscipline incident in nellai sangarankovil!

அதனையடுத்து அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவி ஆசைப்பட்டு கேட்டார் என்று ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கிக்கொடுத்துள்ளார் கோமதிசெல்வம். அதில் நெட் கனெக்ஸன் கொடுத்து பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி முகம் தெரியாத நபர்களுடன் சாட்டிங்கில் ஈடுபட்ட முத்துமாரி தொடர்ந்து பல மணிநேரம் பேஸ்புக் சாட்டிங்கில் கழித்துள்ளார். இதனைக்கண்டு கடிந்துகொண்ட கணவர் கோமதி செல்வத்துக்கும் முத்துமாரிக்கும் இடையே அவ்வப்போது கருத்துவேறுபாடு ஏற்பட்டுவந்துள்ளது.

indiscipline incident in nellai sangarankovil!

இந்நிலையில் கடந்த வியாழன் வேலைமுடித்து வந்த கணவன் கோமதிசெல்வம் மனைவி முத்துமாரி பேஸ் புக் சாட்டிங்கில் மூழ்கியிருப்பதை கண்டு ஆத்திரம் அடைந்து அரிவாளால் வெட்டிக்கொன்றுவிட்டு யாருக்கும் தெரியாதது போல் கதவை தாளிட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டார். அவர் படுகொலை செய்யப்பட்டுவிட்டதாக உறவினர்கள் தெரிவிக்க பதறியடித்து ஓடி வந்து கண்ணீர் விட்டு அழுது நாடகம் நடத்தியது தெரியவந்தது.

இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.