Advertisment

சொல்ல சொல்ல கேட்காமல் டிக் டாக் வீடியோ எடுத்த மனைவி குத்தி கொலை!!

கோவை குளத்துபாளையத்தில் டிக் டாக் செய்த மனைவியை கணவன்கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

indiscipline incident in kovai

கோவை குளத்துபாளையத்தைச் சேர்ந்த நந்தினி, கனகராஜ் என்பவரை காதலித்து மணந்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. நந்தினி தனியார் கல்லூரியிலும், கனகராஜ் சென்ட்ரிங் வேலையும் பார்த்து வந்தனர். இந்நிலையில்நந்தினி அடிக்கடி யாருடனோ தொலைபேசியில் பேசியதாகவும் அதனால் அவர் மீது சந்தேகம் கொண்டு கனகராஜ் அடிக்கடிசண்டையிட்டதாகவும் கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க டிக் டாக்வீடியோ மீது நந்தினிக்கு அதிக நாட்டம் இருந்தது. விதவிதமான வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார் அவர். இதுவும் கனகராஜ்க்கும்பிடிக்கவில்லை இப்படிஎல்லாம் சேர்ந்து தம்பதிக்கு இடையே பெரிய கருத்து வேறுபாட்டை உருவாக்கியது. இதனால் காதல் திருமணம் கசக்கதொடங்கியது. ஒருகட்டத்தில் இருவரும் பிரிந்து வாழத்தொடங்கியுள்ளனர். ஆனால் அவர் டிக் டாக் வீடியோ செய்வதை தொடர்ந்துகண்டித்து வந்துள்ளார் கனகராஜ். ஆனால் அவர் சொல்ல சொல்ல கேட்காமல் தன்போக்கில் இருந்துள்ளார் நந்தினி.

Advertisment

indiscipline incident in kovai

இருவரும் விலகி இருந்தாலும் அடிக்கடி நேரிலும் தொலைபேசியிலும் நந்தினியிடம் கனகராஜ் சண்டையிடுவார் என கூறப்படுகிறது. வழக்கம் போல நந்தினிக்குபோன் செய்துள்ளார் கனகராஜ் ஆனால் பலமுறை முயற்சித்தும் நந்தினி செல்போன் பிசியாக இருந்தால் கனகராஜ் ஆத்திரம் அடைந்துள்ளார். இதனையடுத்துநந்தினி பணிபுரியும் கல்லூரிக்கு சென்று அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

கனகராஜைகைது செய்திருக்கும் காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

death kovai murder police tik tok
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe