கோவை போத்தனூர் ஸ்ரீராம் பகுதியை சேர்ந்த ஜான்பிரிட்டோ. வயது28. இவர் நேற்று நள்ளிரவில் போத்தனூர் பகுதியில் உள்ள மதுபான கடையில் தன்னுடைய சக நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இதில் அங்குள்ள சில நண்பர்களுடன் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு செய்தவர்கள் ஜான்பிரிட்டோவை பின் தொடர்ந்து அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த 4 நபர்கள் அவருடனும் அவர்களது பெற்றோருடனும் தகராறு செய்து ஜான்பிரிடோவை சரமாரியாக கத்தியால் குதியுள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இவருடன் வந்த மற்றோரு நண்பருக்கு கத்திக்குத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருக்கிறார்.இதன் பின் அங்கு வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ஜான்பிரிட்டோ என்பவர் முன்னாள் குற்றவாளி என்பதும், உன்னிகிருஷ்ணன் என்ற கஞ்சா வியாபாரியை ஜான்பிரிட்டோ மற்றும் அவர்களது நண்பர்கள் கொலை செய்ததாக ஒரு வழக்கு நிலைவையில் உள்ளதாகவும், இவர் டெய்லர் வேலை செய்து வருவதாகவும் இதனுடன் கஞ்சா வியாபாரமும் செய்து வருவதாக தெரியவந்தது.