ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்து டி.வல்லகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாயாண்டி என்பவரின் மகள் ராதிகா. கடந்த மாதம் 29ம் தேதி அதே கிராமத்தில் உள்ள கால்வாயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் ராதிகா. சடலத்தை மீட்ட அபிராமம் போலீசார் சம்பந்தப்பட்ட இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

indiscipline incident in kamuthi... police investigation

Advertisment

அரசு மருத்துவமனையில் ராதிகாவின் உடல், உடற்கூறு ஆய்வு செய்து முடிக்கப்பட்ட போது அதை வாங்க மறுப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராதிகா கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்தகொலையில் உள்ளவர்கள் குறித்து விசாரணை செய்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

indiscipline incident in kamuthi... police investigation

ராதிகாவிற்கு மாற்று சமூகத்தைச் சேர்ந்த வேறு ஒருவருடன் தகாத உறவு இருந்ததாக உறவினர்கள்குற்றம் சாட்டினார். எனவே அந்த மாற்று சமுகத்தை சேர்ந்தவர்கள் தான் இவரை கொலை செய்திருக்க வேண்டும் எனவும் உறவினர்கள் குற்றம் சாட்டினார். இதனையடுத்துஇந்த தற்கொலை வழக்கானது வன்கொடுமை மற்றும் கொலை வழக்காக மாறியது. குறிப்பிட்ட இந்த இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் அரசு சார்பில் வழங்கப்படும் 8 லட்சத்து 25 ஆயிரம் இழப்பீட்டில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் ராதிகா குடும்பத்துக்கு கிடைத்தது.

indiscipline incident in kamuthi... police investigation

indiscipline incident in kamuthi... police investigation

இழப்பீடை பெற்றுக்கொண்ட ராதிகாவின் குடும்பத்தினர் சடலத்தை வாங்கி சென்றனர். இதைத்தொடர்ந்து போலீசார்தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையை தீவிரப்படுத்தியதில் ராதிகாவுக்கு திருமணமாகி ஓராண்டுதான் ஆகியுள்ளது. கணவன் மனைவி இடையே புரிதல் இல்லாததால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நாளடைவில் பிரச்சனையாக உருமாறியது. அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், அப்போது வேறு ஒரு நபருடன் ராதிகாவுக்கு தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

indiscipline incident in kamuthi... police investigation

அந்த நபரையும் பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். ஆனால் அந்த நபர் கொலையாளி அல்ல என்பது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து ராதிகாவின் குடும்பத்தினர் பக்கம் போலீஸின் பார்வை திரும்பியது. அவர்களை துருவித்துருவி விசாரித்த போதுமுன்னுக்குப்பின்முரணான தகவல்களை அளித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரித்ததில் ராதிகாவின் தவறான தொடர்பை கண்டித்த உறவினர்களே ராதிகாவை அடித்து கொலை செய்து வீசிவிட்டுகடைசியில் நாடகமாடியது தெரியவந்தது. இந்த வழக்கில் ராதிகாவின் உறவினர்கள்பாபா, விக்னேஷ்வரன், முருகன், மோகன், அழகர்சாமி, முனியசாமி ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.