சென்னை வண்டலூரை அடுத்த மண்ணிவாக்கத்தில் உள்ள கக்கன் தெருவை சேர்ந்தவர் பவானி. ஐந்து வருடங்களுக்கு முன்பே அவரது கணவர் அன்பு இறந்துவிட்ட நிலையில் சோமமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/z3_20.jpg)
இந்த பழக்கமானது நாளடைவில் தவறான உறவாக உருவெடுத்தது. ஆனால் பவானியின் இந்த உறவை தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார்பவானியின் மூத்த மகனான சம்பத்குமார். ஆனால் சம்பத் குமாரின் கண்டிப்பை கேட்காத பவானி அவரது இரண்டு மகன்களையும் பிரிந்து ராஜ்குமாருடன் வாழ முடிவெடுத்து பிரிந்து சென்று தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/z4_18.jpg)
இந்நிலையில் பவானி அவரது அம்மாவை பார்ப்பதற்கு மண்ணிவாக்கம் வந்துள்ளார். இதனை கேள்விப்பட்ட மூத்த மகன் சம்பத்குமார்அவர்கள் வீட்டில் இருந்து வெளியே வருவதை நோட்டமிட்டு பின் தொடர்ந்து சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளான். அப்போது திடீரென வாக்குவாதம் முற்ற, சம்பத்குமார் இரும்பு கம்பியால் தாய் பவானி மற்றும் ராஜ்குமாரைதாக்கியுள்ளான். அப்போது காயமுற்ற பவானி சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/z5_10.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/z7_7.jpg)
இந்த சம்பவத்தில்காயமுற்ற ராஜ்குமார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பத்குமாரை கைது செய்துள்ள போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us