தமிழகம் முழுவதும் வரும் 11- ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் மறைமுக தேர்தல் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.

Advertisment

indirect election video recording madurai high court branch

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லலிதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில் மறைமுக தேர்தல் முழுவதும் வீடியோ பதிவு செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று (09.01.2020) விசாரணைக்கு வந்த போது, மாநில தேர்தல் ஆணைய தரப்பு, தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள மறைமுகத் தேர்தலை வீடியோ பதிவு செய்யப்படும் என்றும், வீடியோ பதிவு தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு இன்றே அறிவுறுத்தல் தரப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து வீடியோ பதிவு தொடர்பாக ஜனவரி 21- ஆம் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.