மேயர், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி தலைவர் பதவிக்கான விருப்ப மனு கட்டணத்தை திமுகவினர் திரும்பப் பெறலாம் என்றும், ரசீதை கொடுத்து நவம்பர் 28- ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பணத்தை திரும்பப் பெறலாம் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

Advertisment

INDIRECT ELECTION RETURN MONEY DMK PARTY ANNOUNCED

அந்த அறிவிப்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட தலைவர் பதவியைத் தவிர கவுன்சிலர் பதவிக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்ட நவம்பர் 27- ஆம் தேதி வரை திமுகவினர் விருப்ப மனு அளிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடப்பதால் விருப்ப மனு பணத்தை திரும்பப் பெறலாம் என்று அதிமுக கட்சி தலைமை நேற்று அறிவித்தது. அதை தொடர்ந்து, திமுகவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.