வெள்ளலூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு!

Indirect election adjournment for Vellalore mayor

மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் இன்று காலை 10 மணிக்கு துவங்கிநடைபெற்று வருகிறது.

பெரும்பாலான இடங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டின்றிதேர்வாகிவரும்நிலையில், கோவை வெள்ளலூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திமுக- அதிமுகவினர்இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 15 வார்டுகளை கொண்ட கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் 8 வார்டுகளில் அதிமுகவும், 6 வார்டுகளில் திமுகவும் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் அதிமுக-திமுகஇடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக அங்கு சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

kovai police
இதையும் படியுங்கள்
Subscribe