மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், அசாம், பீகார், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முதல்வர்கள், பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

 India's Department of Citizenship sent back by German student MADRAS IIT

தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டிசம்பர்- 19ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்ற சென்னை ஐஐடியில் பயின்று வரும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜேக்கப் என்ற மாணவர், மத்திய அரசை விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

 India's Department of Citizenship sent back by German student MADRAS IIT

இதையடுத்து ஜெர்மனி மாணவரின் அனுமதியை ரத்து செய்த இந்திய குடியுரிமை அதிகாரிகள், அந்த மாணவரை ஜெர்மனிக்கு திருப்பிஅனுப்பியதாக கூறப்படுகிறது.