ஊரடங்கினால் மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்கள், நாடு திரும்ப எடுத்த நடவடிக்கை என்னவென்பது குறித்து ஒரு வாரத்தில் விளக்கமளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியாவில் மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/wdwe_6.jpg)
இந்நிலையில், இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு சென்ற 350-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், ஊரடங்கினால் நீண்ட நாட்களாக அங்கேயே தங்கியுள்ளனர். சுற்றுலா விசாவில் சென்ற பலரின் விசா காலம் முடிவடைந்த நிலையில், தங்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கும்படி மலேசிய தூதரகத்திற்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், ஊரடங்கினால் இந்தியா திரும்ப முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள 350 இந்தியர்களையும் நாடு திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, மலேசியாவில் சிக்கியுள்ள முல்லைநாதன் சார்பில் வழக்கறிஞர் ஞானசேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அமர்வு, மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif_75.gif)