Advertisment

இன்று (15.9.2020) அகில இந்திய மகளிர் காங்கிரஸ் நிறுவன நாளை முன்னிட்டு மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளருமான சௌமியா ரெட்டி எம்.எல்.ஏ. தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில மகளிரணி தலைவி சுதா ராமகிருஷ்ணன் ஏற்பாட்டில் மகளிரணியினர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை கேக் வெட்டி கொண்டாடினர்.

பின்னர் கட்சி கொடியேற்றி, மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் விஜயதாரணி எம்.எல்.ஏ கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது.