அகில இந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் அகில இந்திய மாணவர் சங்கம் இணைந்து, மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்;இனப் படுகொலைகளைத்தடுத்து நிறுத்த வேண்டும்;அரசியலமைப்பு சட்டத்திற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராகச் செயல்படும் ஆளுநர் ரவி வெளியேற வேண்டும்;பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வராதே;ஹிந்தி மொழியைத்திணிக்காதே உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதியில் இந்திய ஒற்றுமைப் பேரணி நடந்தது. இந்த பேரணியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு துவக்கி வைத்தார். இந்த பேரணி சைதாப்பேட்டை ஐந்து விளக்கில் துவங்கிகுயவர் வீதி வரை நடைபெற்றது.
இந்திய ஒற்றுமைப் பேரணி (படங்கள்)
Advertisment