Advertisment

பதக்கத்துடன் திரும்பிய இந்திய அணி... பெண் வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பளித்த ஊர் மக்கள்!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகாவில் உள்ளது கண்டமத்தான் என்ற சிறு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவரது மகள் மீனாட்சி. நேபாளத்தில் உள்ள காட்மெண்டில் சமீபத்தில் சர்வதேச பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய பெண்கள் அணியினர் விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர். இந்தப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த5 மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

Advertisment

அதில் கண்டமத்தான் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவரது மகள் மீனாட்சி ஒருவர் ஆவார். இவர் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று விளையாடி வெற்றிபெற்று சொந்த ஊர் திரும்பியுள்ளார். அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்துள்ளனர். மேலும், அவருக்குப் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisment

குறிப்பாக, புவனகிரி அதிமுக எம்.எல்.ஏ. அருள்மொழிதேவன் கபடி வீராங்கனை மீனாட்சிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அதோடு கபடி போட்டியில் கலந்துகொள்வதற்குத் தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். இந்த மாணவியின் திறமையை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அந்தக் கிராமத்து மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Nepal women sports thittakkudi Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe