Indian Students Union struggles demanding appointment of vice-chancellors in universities

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகளை கண்டித்தும், சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை உடனடியாக நியமித்திட ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்கவும், நிதி பிரச்சனையால் சிக்கித் தவித்து வரும் மாநில பல்கலைக்கழகங்களை பாதுகாக்கத்திட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்த ஆர்பாட்டத்திற்கு அண்ணாமலை பல்கலைக்கழக இந்திய மாணவர் சங்கத்தின் கிளை நிர்வாகி அரவிந்த் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் அமுல் காஸ்ட்ரோ, சௌமியா ஆகியோர் கலந்துகொண்டு போராட்டத்தின் நோக்கங்கள் குறித்து கண்டன உரையாற்றினார்கள். இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் பூபதி, விஷ்ணு, சிவானந்த், சிவநந்தினி,வீரமணி ஆகியோர் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம், சி.முட்லூர், பெரியார், கொளஞ்சியப்பர், எம்.ஜி.ஆர் அரசு கலைக் கல்லூரிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து கோசங்களை எழுப்பினார்கள்..

Advertisment