Published on 15/11/2021 | Edited on 15/11/2021

அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய மாணவர் சங்கம், கடலூர் மாவட்டக்குழு சார்பில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்குச் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஆகாஷ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் குமரவேல், நிர்வாகிகள் ராகுல், சரவணன், அரவிந்த், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.