கோயம்புத்தூரில் நடந்த குண்டுவெடிப்பு கலவரம் காரணமாக, கோவை சிறையில் நீண்ட நாள் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் அப்பாவி முஸ்லீம்களை விடுவிக்க தமிழக அரசிடம் கோரிக்கையினை வைத்துள்ளனர் இந்திய தேசிய லீக் கட்சியினர்.

Advertisment

bomb

இது சம்பந்தமாக இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ஜெ அப்துல் ரஹிம், " 1997 நவம்பர் கோவையில் நடந்த இந்த குண்டுவெடிப்பு கலவரத்துக்கு காவல்துறையே காரணம் என இந்திய தேசிய லீக் கட்சி பல சந்தர்ப்பங்களில் கூறிவந்துள்ளது. இந்நிலையில் இப்போது, கோவை குண்டுவெடிப்பு கலவரத்துக்கு காரணம் காவல்துறை எனவும், நாங்கள் காவல்துறையை இதுவரை காட்டி கொடுத்தது இல்லை என பா.ஜ.க. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பா.ஜ.க. தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். எனவே, தற்போதைய அ.தி.மு.க அரசு 1997 ல் கோவையில் நடந்த குண்டுவெடிப்பு கலவரத்துக்கு யார் காரணம் என விசாரணை கமிஷன் வைத்து நீதியை நிலைநாட்ட வேண்டும். கோவை குண்டுவெடிப்பினைக் காரணம் காட்டிசுமார் 20 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள 47 அப்பாவி முஸ்லீம் சிறைவாசிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்." என தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.