திருச்சியில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட மகளிர் அணியினர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்ததிமுக மகளிரணி தலைவர் கனிமொழி இன்று காலை செய்தியாளர்களை சந்தத்தார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

அப்போது அவர், தேசிய தலைவர்கள்திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலினை சந்திப்பது அதிகரித்து வருவது திமுகவின் செல்வாக்கு மக்களிடையே உயர்ந்திருப்பதை காட்டுகிறது என்றார்.

தேசிய தலைவர்கள் ஸ்டாலினை சந்திப்பது காங்கிரஸ் கட்சியை கழட்டி விடுவதன் முயற்சியா என்ற கேள்விக்கு, திமுக தலைவர்கள் இது கூட்டணிக்கான சந்திப்பு அல்ல என்றும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், மாநிலம் சார்ந்த பிரச்சினைகள் மட்டுமே பேசுவதாகவும், கலைஞரை சந்தித்து உடல் நலம் விசாரித்த பிறகு ஸ்டாலினை தலைவர்கள் சந்திப்பதாக குறிப்பிட்டார்.

Advertisment

kani

நீட் தேர்வு மையங்கள் அடுத்த மாநிலத்தில் அமைக்கப் பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்த அவர், தமிழக அரசு எத்தனை இடங்களில் நீட் தேர்வுகள் அமைக்க விரும்புவது குறித்து தெளிவாக குறிப்பிடவில்லை. அதோடு வழக்கம் போல மத்திய அரசும் தமிழக அரசின் மீது அக்கறை இல்லாமல் செயல்பட்டிருக்கிறது. அரசு அதிகாரிகளும் அலட்சியத்துடன் செயல்பட்டுள்ளது என்றார்.