குடியரசுத் தின விழாவில் தமிழக ஊர்தியை அனுமதிக்காததைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பேரணி!

Indian Democratic Youth Association rally to condemn Tamil Nadu for not allowing vehicles on Republic Day

டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா ஊர்வலத்தில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் வேலுநாச்சியார், பாரதியார், வ.உ.சிதம்பரனார், மருது சகோதரர்கள் உள்ளிட்டோரின் உருவம் பொறித்த ஊர்தியை அனுமதிக்காததைக் கண்டித்து, கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மேல வீதி கஞ்சித்தொட்டி முனையிலிருந்து அண்ணா சிலை வரை சுதந்திர போராட்ட வீரர்களின் உருவம் பொறித்த முகமுடியை அணிந்து ஊர்வலமாக சென்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் குமரவேல், வாலிபர் சங்க கீரப்பாளையம் ஒன்றிய தலைவர் சதிஷ், சிதம்பரம் நகரச் செயலாளர் கோபால், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் கவியரசன், மாவட்டக் குழு உறுப்பினர் பிரதீஷ்குமார், மாவட்ட துணைச் செயலாளர் லெனின், துணைத்தலைவர் ஆகாஷ் பரங்கிப்பேட்டை ஒன்றிய பொருளாளர் அருள்தீபன், கீரப்பாளையம் ஒன்றிய பொருளாளர் சூர்யா உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கஞ்சித் தொட்டி முனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் நகரச் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். கட்சியின் மூத்த உறுப்பினர் மூசா, நகர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியினர் 50- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்
Subscribe