/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/04_20_0.jpg)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான நல்லகண்ணு (வயது 95) அரசியல் வாழ்க்கையில் அனைவராலும் விரும்பக் கூடிய தலைவர்களில் ஒருவர். அவரை கௌரவிக்கும் வகையில், 75- வது இந்திய சுதந்திர தின விழாவின்போது, நல்லகண்ணுவுக்கு 'தகைசால் தமிழர்' விருதினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார். எனினும், தனக்கு விருதுடன் கிடைத்த 10 லட்சம் ரூபாய் பணத்தை தமிழக அரசின் பொது நிவாரண நிதிக்கே திருப்பிக் கொடுத்தார்.
வயதுமூப்பு காரணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்த நிலையில், வீட்டில் ஓய்வில் இருந்த அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், இன்று (01/10/2022) சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை பாதிப்பு குறித்து பரிசோதித்து வருவதாக ராஜீவ் காந்தி மருத்துவமனையின் முதல்வர் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார்.
அவர் விரைந்து குணமடைந்து வீடு திரும்ப தமிழக அரசியல் தலைவர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினரும் வேண்டியுள்ளனர்.
இதனிடையே, மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க ஆளுநரான இல.கணேசனுக்குஇன்று (01/10/2022) மாலை ஏற்பட்டதிடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)