/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/high-court-in_115.jpg)
இந்தியக்குடியுரிமை வழங்க வேண்டும் என்ற இலங்கையில் பிறந்த இந்திய வம்சாவளியின் கோரிக்கையை ஆறு வாரங்களில் பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம், இரும்பூதிப்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள கணேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தேயிலைத் தோட்ட பணிக்காகத் தனது மூதாதையர்கள் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், இலங்கையில் பிறந்த இந்திய பிரஜையான தான், 1990ல் தாயகம் திரும்பியதாகவும் கூறியுள்ளார். ஆனால் இந்திய குடிமகனான தன்னை இலங்கை அகதி என தவறாக முகாமில் சேர்த்து விட்டதாகவும், தனக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இதுசம்பந்தமாக மத்திய அரசுக்கு தான் அனுப்பிய மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும், தாயகம் திரும்பியோருக்கான சலுகைகள் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், மனுதாரர் கடந்த ஜனவரியில் அளித்த கோரிக்கை மனுவை ஆறு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)