Advertisment

கோவையில் வங்கி முன்பு விஷம் குடித்து விவசாயி தற்கொலை

கோவையில் இந்தியன் வங்கி முன்பு விஷம் குடித்து விவசாயி பூபதி தற்கொலை செய்துகொண்டார்.

Advertisment

s

சங்ககிரி கொங்கணாபுரத்தை சேர்ந்த விவசாயி பூபதி, தனது நண்பர்களுடன் இணைந்து பால்பண்னை தொடங்குவதற்காக இந்தியன் வங்கியில் கடன் பெற்றுள்ளார். அடமான பத்திரங்களை வைத்தேஇந்த கடன் பெறப்பட்டுள்ளது. பால் பண்ணை லாபகரமாக இயங்காததால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் வங்கியில் வைத்த பத்திரத்தை மீட்பதற்காக சென்றார் பூபதி. கடனை திருப்பி செலுத்தினால்தான் பத்திரம் தரப்படும் என்று வங்கி கூறியபோது, தனது பங்கு கடனை மட்டும் எப்படியாவது செலுத்திவிடுகிறேன் என்று கூறி பத்திரத்தை கேட்டிருக்கிறார் பூபதி. இதனால் பூபதிக்கும் வங்கி மேலாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

3 பேரும் கடனை திருப்பி செலுத்தினால்தான் பத்திரத்தை தர முடியும் என்று வங்கி மேலாளர் உறுதியாக சொல்லிவிட்டதால் விரக்தியில் விவசாயி பூபதி வங்கி முன்பு பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

suside
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe