Advertisment

தற்கொலை செய்துக்கொண்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்... அரசு மரியாதையுடன் அடக்கம்...

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் 38 வயதான ராஜேஷ். இவர் மத்தியரசின் எல்லை பாதுகாப்பு படையில் அசாம் மாநிலத்தில் படை வீரராக பணியாற்றி வந்தார். கடந்த 17ஆம் தேதி இரவு பணியில் இருந்தபோது தற்கொலை செய்துக்கொண்டார். தற்கொலை செய்துக்கொண்டு இறந்த ராஜேஸ்க்கு திருமணமாகி புவனேஸ்வரி என்ற மனைவியும், 6 வயதில் ஜனனி என்ற பெண் குழந்தையும், 2 வயதான சாய்கிருஷ்ணன் வயது என இரு பிள்ளைகள் உள்ளனர்.

Advertisment

03

இறந்த ராஜேஷ் உடல் கவுகாத்தியில் உள்ள மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு அவரது உடல் சென்னைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான திருப்பத்தூர்க்கு அவ்வீரரின் உடல் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் மே 19ந்தேதி காலை 11.30 மணியளவில் பாரதி நகர் சுடுகாட்டில் காவல்துறை மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Vellore indian army
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe